தமிழ் பாரம்பரிய சடங்குகளுடன் திருக்கோணமலையில் பொங்கல் நிகழ்வு

  

tamil lk news

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் கலாச்சார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேலூர் மிட்சு மீள்குடியேற்ற கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இன்று(14) இடம்பெற்றது.


கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


இதில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் உட்பட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.



இந்து கலாச்சார பழக்கவழக்கங்களின்படி மத சடங்குகள் மற்றும் பண்டைய காலத்து தமிழ் பாரம்பரிய சடங்குகள் இதன்போது நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


tamil lk news



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்