யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதியில் தினமும் 07 மணிநேர மின் வெட்டு!

tamil lk news


  யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவு பிரதேசத்தில் தினமும் 07 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நெடுந்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். 


நெடுந்தீவு பிரதேசத்திற்கு  இலங்கை மின்சார சபையினால் நான்கு மின் பிறப்பாக்கிகள் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. 


இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பழுதடைந்துள்ளன. 


அதனால் தினமும் 07 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. 



இதனால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நெடுந்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். 


எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி பழுதடைந்த மின் பிறப்பாக்கிகளை உடனடியாக திருத்த வேலைகளை மேற்கொண்டு, சீரான மின் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்