தெற்கு ஜப்பானில் (Japan) உள்ள கியூஷு பகுதியில் இன்று (13) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கியூஷு பகுதியில் இருந்து 37 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் கியூஷி உள்ளிட்ட நகரங்கள் அதிர்வுகளை உணர்ந்துள்ளதுடன் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்து தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.