பண்டாரவளையில் சதொச நிறுவனத்தில் தீவிபத்து!

 

tamil lk news

 பண்டாரவளையில்(Bandarawela) அமைந்துள்ள சதொச நிறுவனக் கட்டிடத்தில் இன்று(20) அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தையில் உள்ள பழைய வணிகக் கட்டடத்தில் அமைந்துள்ள சதொச கட்டடத்திலேயே இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


 இன்று அதிகாலை நான்கு மணியளவில் குறித்த தீவித்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 பண்டாரவளை நகர சபை மற்றும் பொலிசார் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தி, ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



எனினும் தீவிபத்தின் காரணமாக சதொச நிறுவனத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


News Thumbnail
வயல்கள் நீரில் மூழ்கி நாசம் - கிளிநொச்சி விவசாயிகள் கவலை




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்