2024 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

  

tamil lk news

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகின. 


பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.


 இதன்படி, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk  இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். 


இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.


 இதில் 244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தனர். 



மேலும், இந்த பரீட்சை வினாத்தாளில் 3 வினாக்கள் வெளியில் கசிந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சை நிலைகள் ஏற்பட்டிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.



இதனையடுத்து,  பரீட்சை  வினாத்தாள் மதிப்பீடு நடவடிக்கைகளிலும் இது பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்த நிலையில்,  பல்வேறு சர்ச்சை மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் பரீட்சை மதிப்பீடுகள் நடத்தப்பட்டு பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்