வவுனியாவில் மாவட்ட மட்ட ஊர் சுற்றும் ஓட்டப்போட்டி (Vavuniya News)

  வவுனியா(Vavuniya) பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்  மாவட்ட மட்ட ஊர் சுற்றும் ஓட்டப்போட்டி இன்று (26) இடம்பெற்றிருந்தது.


வவுனியா குடியிருப்பு  சித்தி விநாயகர் ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் திரேஸ்குமாரினால் கொடி அசைத்து குறித்த போட்டியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

tamil lk news


15 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 15 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமானதாக அமைந்திருந்தது.


இதேவேளை மாவட்ட ஊர் சுற்றும் போட்டியானது,  பாடசாலையில் இருந்து ஆரம்பித்து, வைத்தியாசலை சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி, குடியிருப்பு கோயிலின் ஊடாக வவுனியாகுளக்கட்டின் ஊடாக  பூந்தோட்டம் சந்திகனயின் ஊடாக  மீண்டும் குடியிருப்பு விநாயகர் ஆலயத்திற்கருகில் முடிவடைந்திருந்தது. 



மேலும் இப் போட்டியில் கலந்து கொண்டவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களிற்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

tamil lk news


வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்