யாழில் - இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர் - குவிந்த மக்கள்

Tag Cloud Example

  

tamil lk news

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் இயேசுவின் சிலுவையில் இருந்து இன்று நீர் கசிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இயேசுவின் காலில்

மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்துள்ளது.


சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றுள்ளனர்.


சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிசார், பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன். புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர். 



சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே,



மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்