வவுனியா - மன்னார் வீதியில் விபத்து! பெண் ஒருவர் படுகாயம்! Vavuniya News Tamil

 

 Vavuniya News Tamil

வவுனியா - மன்னார் வீதியில் விபத்து! பெண் ஒருவர் படுகாயம்! Vavuniya News Tamil -Accident on Vavuniya - Mannar road! A woman was seriously injured! Vavuniya News Tamil


வவுனியா (Vavuniya) - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


குறித்த விபத்து இன்று (21.02.2025) இடம்பெற்றுள்ளதாக நெளுக்குளம் பொரிஸார் கூறியுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



 வவுனியா (Vavuniya) - மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த எரிபொருள் நிரப்பிய டிப்பர் வாகனம் ஒன்று, நிலையத்தில் இருந்து  வீதிக்கு வர முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளது.




 இதன்போது நகரில் இருந்து வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்