ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்ட மூவர்! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்-Srilanka Tamil News

 Srilanka Tamil News

tamil lk news


 காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 இதற்காக ஏழு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த பகுதியில் இடம்பெற்ற, துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


 மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேகநபர்களால் சுடப்பட்டதில், விடுதி ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.



 உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதுடன், மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.



 மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


இந்நிலையில் புதிய பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


News Thumbnail
முன்னாள் காதலன் அரங்கேற்றிய சம்பவம்; பறிபோன உயிர்...!


News Thumbnail
நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - Srilnka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்