Jaffna News Tamil
யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட மாடுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (24) சாவகச்சேரிப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த லொறியை சாவகச்சேரி நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர்.
இதன்போது, உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 18 மாடுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka News Tamil