வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு -Vavuniya News Tamil

 Vavuniya News Tamil

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு -Vavuniya News Tamil-Body of a man recovered in Vavuniya -Vavuniya News Tamil


வவுனியா (Vavuniya) - பசார் வீதியில் உள்ள கடை தாெகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சடலமானது இன்று (11) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த பகுதியிலுள்ள கடை தாெகுதியின் மாடியில் தங்கியிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.


 வவுனியா- சாந்தசாேலை பகுதியை சேர்ந்த சுப்பையா ஆனந்தன் (வயது 40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.


 குறித்த நபர் மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்துள்ளதாக பாெலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இது காெலையா அல்லது விபத்தா என தடவியல் பாெலிஸாரின் உதவியுடன் வவுனியா பாெலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்