Srilanka News Tamil
அளுத்கடை நீதிமன்ற வளாகத்தின் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல சட்டத்தரணிகள் போல் வேடமணிந்த இருவர் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
வழக்குரைஞர் போல் மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்த நபர், பின்னர் சட்டத்தரணி போல் வேடமணிந்த குறித்த பெண்ணிடம் இருந்து துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைகள் பல கோணங்களில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிதாரி மற்றும் சந்தேக நபர்களை வெகு சீக்கிரத்தில் கைது செய்வதாகவும் தொடர்ந்தும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை துப்பாக்கிதாரியை ஏன் கைது செய்ய முடியவில்லை என்று ஊடகவியலாளர்கள் வினா எழுப்பிய பொழுது,
துப்பாக்கி சூடு நடக்கிறது என்று கூவிக் கொண்டு
துப்பாக்கிதாரி தனது துப்பாக்கியால் கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுவிட்டு உள்ளே துப்பாக்கி சூடு நடக்கிறது என்று கூவிக் கொண்டு வெளியில் தப்பி ஓடியுள்ளார்.
துப்பாக்கி சத்தத்தில் மிரண்ட மக்களும் அலறியடித்துக் கொண்டு வெளியில் சென்றதால் சந்தேக நபரை அடையாளம் காண முடியவில்லை.
அதேவேளை அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த காவலர்கள் நீதிபதியையும் நீதிமன்ற உத்தியோகத்தர்களையும் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியிருந்தனர்.
ஆகவே துப்பாக்கிதாரியை பிடிக்க எந்த சந்தர்ப்பமும் ஏற்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.