சிவராத்திரி தினத்தில் அசைவம் உண்ட மாணவிகள் மீது தாக்குதல்!

 

சிவராத்திரி தினத்தில் அசைவம் உண்ட மாணவிகள் மீது தாக்குதல்! -Attack on students who ate non-vegetarian food on Shivaratri!

 மகா சிவராத்திரி தினத்தில் (26) அசைவம் சாப்பிட்ட பல்கலைக்கழக மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து வலதுசாரி மாணவர் அமைப்பு இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் செயல்பட்டு வரும் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் சில மாணவிகள் நேற்று அசைவம் சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது, வலதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் வந்து, "மகா சிவராத்திரி தினத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது.



 மீறி சாப்பிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தனர். ஆனால், அதையும் மீறி அந்த மாணவிகள் அசைவம் சாப்பிட்ட போது திடீரென மோதல் ஏற்பட்டது.



 இந்த மோதலில், வலதுசாரி அமைப்பை சேர்ந்த மாணவர்கள், அசைவம் சாப்பிட்ட மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்