Srilanka News Tamil
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று(24.02.2025) பிற்பகல் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கயஸ் வாகனமும் பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில், தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கயஸ் வாகனத்தில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.