கண்டியில் மசாஜ் நிலையம் என்ற பேரில் விபச்சார விடுதி; பெண்கள் உட்பட மூவர் கைது!

 Srilanka News Tamil

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற பேரில் விபச்சார விடுதி;  பெண்கள் உட்பட மூவர் கைது!Three people, including women, arrested for brothel in Kandy disguised as massage parlor!


 கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மெனிக்ஹின்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டித கம்மெத்த பிரதேசத்திலேயே நேற்று வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் மெனிக்ஹின்ன பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மெனிக்ஹின்ன பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவரும்,


கண்டி அசலக்க மற்றும் கரந்தகொல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 34 வயதுடைய இரண்டு பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் பெண் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெனிக்ஹின்ன  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்