Srilanka News Tamil
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலொன்று ஹட்டன் ரயில் நிலையத்தை நெருங்கும் போது சாரதி திடீரென சுகவீனமடைந்துள்ளார்.
இதன் காரணமாக, நேற்று மாலை 5:00 மணியளவில் ரயில் சில மணி நேரம் தாமதமாகியுள்ளது.
இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் ரயில் நிலைய அதிகாரிகள் நாவலப்பிட்டி ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு சாரதியை ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அழைத்து, மாலை 5.30 மணிக்கு ரயிலை அதன் இலக்குக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த மாதம் முதல்......!
பின்னர் சுகவீனமுற்ற சாரதி சுவ செரிய அம்புலன்ஸ் மூலம் டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.