எரிபொருள் விலை குறித்து வெளியான அறிவிப்பு - Srilanka News Tamil

  Srilanka News Tamil

எரிபொருள் விலை குறித்து வெளியான அறிவிப்பு - Srilanka News Tamil - Announcement regarding fuel prices - Srilanka News Tamil


இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இந்த முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படாது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.


அதன்படி,92 ரக பெட்ரோலானது 309.00 ரூபாவுக்கும், 95 பெட்ரோல் 95 பெட்ரோலானது ரக 371.00 ரூபாவுக்கும் வெள்ளை டீசல் 286.00 ரூபாவுக்கும் , சூப்பர் டீசல் 331.00 ரூபாவுக்கும் மற்றும் மண்ணெண்ணெய் 183.00 ரூபாவுக்கும் என்ற அதே விலையில் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.



மேலும், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. de S. ராஜகருணா தெரிவித்துள்ளார்.


 எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.



 எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மேலும், நாளைய தினத்திற்குத் தேவையான எரிபொருள் இருப்பு ஏற்கனவே விநியோகஸ்தர்களால் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்