Srilanka News Tamil
பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் வழங்கும் ரூ.6,000 மதிப்புள்ள வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எழுதுபொருள் வாங்குவதற்காக அரசாங்கம் வழங்கும் இந்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நாளை (15) காலாவதியாகப்போவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் (மார்ச்) 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று (14) வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.