Srilanka News Tamil
அம்பலங்கொடை, இடம்தோட்டை பகுதியில் சற்று நேரத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், கிரிமதுர சமன் குமார என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
உயிரிழந்த நபர் தனது வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலை பெண்கள் கொலையில் 15 வயது சிறுமி கைது!
உயிரிழந்த நபர் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்கி வந்துள்ளதாகவும் அதன் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.