அரசாங்க வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல் - Srilanka News tamil

  

அரசாங்க வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல் - Srilanka News tami-Good news for those waiting for government jobs - Srilanka News tamill

சுமார் 7 வருடங்களின் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதற்காக எதிர்வரும் மே மாதம் திறந்த போட்டிப் பரீட்சை நடத்தப்படும் என அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.


2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள போட்டி பரீட்சைக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அதிகாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



 இதற்காக 130,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது. பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2200 பேர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.


 தற்போது முகாமைத்துவ அதிகாரிகளுக்கான 4,000 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



2018ஆம் ஆண்டிலேயே இறுதியாக முகாமைத்துவ அதிகாரிகள் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்