வவுனியா மாவட்ட செயலகத்தில் தொழில் சந்தை -Vavuniya News Tamil

meta content="srilanka news tamil,vavuniya" name="keywords">

  Srilanka News Tamil

வவுனியா மாவட்ட செயலகத்தில் தொழில் சந்தை -Vavuniya News Tamil-Job fair at Vavuniya District Secretariat -Vavuniya News Tamil


மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன்,  வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள்  இணைந்து நடாத்தும்  தொழில் சந்தை இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.


வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர மற்றும் உதவி மாவட்ட செயலாளர் சாபர்ஜா, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்சனா குமார.ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.



இத்தொழில் சந்தையில் 30க்கு மேற்பட்ட  நிறுவனங்கள் வருகை தந்திருந்ததுடன், 100க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பினை பெறும் நோக்குடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Vavuniya News Tamil



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்