மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை!

 Srilanka News Tamil


மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை/Man who robbed student of money beaten to death with stones

 கொஹுவல பகுதியில் பள்ளி மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மாவத்தை சந்திக்கு அருகில் பள்ளி மாணவன் ஒருவனின் பணம் கொள்ளையடிக்கப்படுவதை நேரில் பார்த்த ஒரு குழு, பணத்தை பறிக்க முயன்றவரை கற்களால் தாக்கி விரட்டியடித்தனர்.




 தாக்குதலுக்குப் பிறகு குறித்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




பின்னர் கொஹுவல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் பணத்தை கொள்ளையடித்த நபர் பிடிக்கப்பட்டு களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்