ஆடையின்றி நிர்வாணமாக கொழும்பிலிருந்து கண்டிக்கு ஓடியவருக்கு நேர்ந்த கதி!

  Srilanka News Tamil

ஆடையின்றி நிர்வாணமாக கொழும்பிலிருந்து கண்டிக்கு ஓடியவருக்கு நேர்ந்த கதி! - The fate of the man who ran naked from Colombo to Kandy!


கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாக பயணித்த இளைஞணின் விள்க்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


நேற்று முன்தினம் (3) கண்டி-கொழும்பு வீதியில் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் அந்த இளைஞன் பயணிப்பதை கண்டு திகைத்த பொலிஸார் , விரட்டிச்சென்று கைதி செய்தனர்.


 கேகாலை மற்றும் மாவனெல்ல பொலிஸார் அந்த நபரைத் துரத்திச் சென்ற போதிலும், அவர்களால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.


கடுகண்ணாவை மற்றும் பேராதனை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவை பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்படுத்தி வாகனங்களைத் தடுத்து அந்த நபரைப் பிடித்தனர்.



 கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​அவர் பீதுருதலாகலைப் பார்வையிட வந்ததாகக் கூறினார்.


அவர் அஹங்கமவிலிருந்து வந்து கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும், திங்கட்கிழமை (03) காலை புறப்பட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தான் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி வீசிவிட்டதாகவும் கூறினார்.



 வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது ஆடைகளைக் கழற்றியதாகவும், அவர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் போனையும் வழியில் தூக்கி எறிந்துவிட்டதாகவும் என பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில் அவரது விளக்கமறியல் மார்ச் 19 ஆம் திகதி வரை கண்டி நீதவானால் நீடிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்