தமிழர் பகுதியில் பதவி பறிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்!

  Srilanka News Tamil

tamil lk news/தமிழர் பகுதியில் பதவி பறிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்/Government official stripped of his position in the Tamil area!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முன்னாள் கிராம சேவையாளர் ஹரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் 2 கிராம் ஹரோயின் வைத்திருந்த குற்றசாட்டில் சந்தேக நபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



 புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியை சேர்ந்த 38 வயதான சந்தேக நபர் கிராம சேவையாளராக இருக்கும் போது, கடந்த சில மாதங்களுக்கு முன் போதைப்பொருளுக்கு அடிமையான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகி வந்தவர் என கூறப்படுகின்றது.


News Thumbnail
இலங்கையிலும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம்! சிரேஷ்ட விரிவுரையாளர் விடுத்த எச்சரிக்கை!


 அந்த சம்பவத்தை அடுத்து குறித்த நபரின் கிராம சேவையாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தேகநபர் நேற்றைய தினம் (28) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.



 கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் (29) புதுக்குடியிருப்பு போலீசார் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆயர் படுத்த உள்ளதுடன் மேலதிக விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்