நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றி

  

நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றி


சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.



 இலங்கை அணியின் சார்பில் மனுடி நாணயக்கார 35 ஓட்டங்கள் எடுத்தார்.


பந்துவீச்சில், நியூசிலாந்து அணி சார்பாக ப்ரீ ஈலிங் மற்றும் ஜெஸ் கெர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



 பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.



நியூசிலாந்து அணி சார்பாக, கேப்டன் சுசி பேட்ஸ் 47 ஓட்டங்களையும், ப்ரூக் ஹாலிடே 46 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்