பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

 Srilanka NewsTamil

 

பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு/Price reduction on many essential items!

லங்கா சதொச நிறுவனத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 


அதன்படி, 1 கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


மேலும், 1 கிலோகிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 279 ரூபா என தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அதேவேளை, 1 கிலோகிராம் கோதுமை மா 2 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 162 ரூபாவாக உள்ளது.


425 கிராம் டின் மீன் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.490 எனவும் 1 கிலோ உருளைக்கிழங்கு 13 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 185 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது



அது மாத்திரமன்றி, 1 கிலோ வெள்ளை பட்டாணி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 750 ரூபா என புதிய விலை குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 160 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 575 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

.


மேலும், 1 கிலோகிராம் கல்லுப்பு 25 ஆல் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 160 ரூபாவாகவும்,


1 கிலோகிராம் வெள்ளை உப்பு 20 ஆல் குறைக்கப்பட்டு புதிய விலை 575 ரூபா என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்