சந்தையில் பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விற்பனை! Srilanka Neqws Tamil

 Srilanka News Tamil

சந்தையில் பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விற்பனை! Srilanka Neqws Tamil-Unusable coconut oil being sold in the market! Srilanka Neqws Tamil


 இலங்கையில்(Srilanka) மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறினார்.



 சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயல்படாமல் போய்விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



 அதேசமயம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும் என்றும், மோசடிகளைத் தடுக்க வலுவான விதிகள் மற்றும் விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறினார்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்