இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம்!

  Srilanka News Tamil

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம்!


இலங்கையின்(Srilanka) முதல் கேபிள் கார் திட்டத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய மலைநாட்டில் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ மலைசிகரத்தில் இருந்து அம்புலுவாவ  மத மற்றும் பல்லுயிர் வளாகம் வரை 1.8 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக கேபிள் கார் திட்டம் வடிவமைக்கப்பட்டவுள்ளது.


.


இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) கம்பளை, அம்புலுவாவாவிற்கு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக விஜயம் செய்தபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.


இந்த விஜயத்தின் போது, ​​சீனத் தூதர் அம்புலுவாவா அறக்கட்டளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராத ஜெயரத்னவை சந்தித்தார்.




18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாத்தியக்கூறு ஆய்வு முடிக்கப்பட்ட இந்தத் திட்டம், சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் ஈடுபாட்டின் காரணமாக இப்போது யதார்த்தமாகி வருவதாக சீனத் தூதருடன் கலந்துரையாடிய  அனுராத ஜெயரத்ன எம்.பி. கூறினார்.


இத் திட்டத்தால் கம்பளை உலகின் பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்