செவ்வந்தி தொடர்பில் துல்லியமான தகவல் வழங்குவோருக்கான பணப்பரிசு அதிகரிப்பு! வெளியான தகவல்

ody>

 Srilanka News Tamil

 

செவ்வந்தி தொடர்பில் துல்லியமான தகவல் வழங்குவோருக்கான பணப்பரிசு அதிகரிப்பு! வெளியான தகவல் - Increased reward for accurate information about the Red Crescent! Information released

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான இரண்டாவது சந்தேக நபரான இஷார செவ்வந்தி தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குவோருக்கான பணப்பரிசு அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே குறித்த பெண்மணி தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 1 மில்லியன் ரூபாய் பணப்பரிசு வழங்குவதாக பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் சந்தேகநபரான செவ்வந்தியை இதுவரை கைது செய்ய முடியாத நிலையில், தகவல் வழங்குவோருக்கான பணப்பரிசு 1.2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



 சந்தேக நபர் தொடர்பாக தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



 அவரைப் பற்றிய துல்லியமான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுள்ளனர்.



சந்தேகநபர் தொடர்பான துல்லியமான தகவல்களை 071 - 859 1727, 071 - 859 1735 என்ற இலக்கங்களை தொடர்பு கொண்டு வழங்கலாம்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்