Srilanka News Tamil
வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க போதுமான காரணங்கள் இல்லாமையால் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23ஆம் திகதி திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் வீட்டிலிருந்த கணவன் மற்றும் மனைவி உயிரிழந்தனர்.
இதனையடுத்து, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடாத்தி வந்த நிலையில், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று(06.03.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதான சந்தேக நபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி சில்வா முன்னிலையாகினார்.
இதன்போது, விளக்கமறியலை நீடிக்க போதுமான காரணங்கள் இல்லாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என நீதிபதி எம்.எம்.எம். மிஹால் உத்தரவிட்டார்.
Vavuniya News Tamil