Srilanka News Tamil
வவுனியாவில்(Vavuniya) 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததாகவும், குறித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Vavuniya News