வீதியைவிட்டு விலகிய டிப்பர் - ஒருவர் பலி, மூவர் படுகாயம்

Srilanka News Tamil

வீதியைவிட்டு விலகிய டிப்பர் - ஒருவர் பலி, மூவர் படுகாயம்/Tipper veers off the road - one dead, three seriously injured


  மன்னார்-பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்துடன் மூவர் காயமடைந்துள்ளனர்.


குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவது


பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.



குறித்த  டிப்பரில் வாகனத்தில் 4 நபர்கள் பயணித்துள்ளனர்.


இதன் போது ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர்.

மேலதிக சிகிச்சைக்காக

காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்