Srilanka News Tamil
வவுனியா(Vavuniya) மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு(DCDB) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், வியாபார நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 போதை மாத்திரைகள் மற்றும் 2200 மில்லிகிராம் ஹெரோயினுடன் தேக்கந்தோட்டம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நடவடிக்கையை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜயசோமமுனியின் அறிவுறுத்தலின் பிரகாரம், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி , சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்கவின் தலைமையில் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Vavuniya News Tamil