வாக்காளர் அட்டைகள்: நாளை விசேட தபால் விநியோக சேவை

 Srilanka News Tamil

Tamil lk News/Srilanka Tamil News


 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை (27) விசேட தபால் சேவை ஊடாக விநியோகிக்கப்படும். வாக்காளர் அட்டை விநியோக பணிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 விசேட வாக்காளர் அட்டை

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமானது. கடந்த 20 ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக சேவை இடம்பெற்றது.


உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை, (27) எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) தினத்தன்றும் இறுதியாக விநியோகிக்கப்படும்.



2025.04.29 ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் 2024 உள்ளுர் அதிகார சபைகள்  தேர்தலுக்காக  தேருநர் இடாப்பில் தாம் பதிவு  செய்துக்கொண்ட  முகவரிக்குரிய தபால் நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர்  உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.



உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை கைவசம் வைத்திருப்பது வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரை அடையாளம் காண்பதற்கு வசதியானதாக அமையுமென்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்