பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை அவமதித்ததாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுக் கடந்த 10 ஆம் திகதி தேசபந்து தென்னகோன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதன் போது நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை மீறும் வகையில் தேசபந்து தென்னகோன் நீதிமன்ற வளாகத்திற்குள் தனது வாகனத்தைக் கொண்டு வந்துள்ளார்.
இதனால் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை அவமதித்ததாக மாத்தறை நீதவான் தீர்மானித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மாத்தறை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனச் சுட்டிக்காட்டிய மாத்தறை நீதவான் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்வதற்குச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.