மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்; பலி 2 ஆயிரத்தை கடந்தது!

  

tamil lk news/மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்; பலி  2 ஆயிரத்தை கடந்தது/Earthquake shakes Myanmar; death toll crosses 2,000!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவில் 7.7 ஆக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.


 இதன் காரணமாக, மண்டலே நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.


இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தற்போது அந்த பணிகள் மந்தமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.


 அதேவேளை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.


5 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மியான்மரின் பெரும்பகுதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.




பேரழிவின் உண்மையான அளவு இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும், இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிற நிலையில் அமெரிக்க பேரிடம் மையம் 10 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்திருந்தது.



 இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மாருக்கு பலவேறு நாடுகளும் உதவிகளை வழங்கி வரும் நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையிலிருந்து வைத்திய குழு ஒன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்