வடக்கு கிழக்கில் 09ம் திகதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை!

 Srilanka News Tamil

tamil lk news/Thunderstorms in the North and East until the 9th!


 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா  தெரிவித்துள்ளா


இதுதொடர்பில் அவர் வெளிட்டுள்ள அறிவிப்பில் 


முன்னரே குறிப்பிட்டபடி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த மழை எதிர்வரும் 09.04.2025 வரை நீடிக்கும்.


தற்போது கிடைக்கும் மழை இடி மின்னல் நிகழ்வுகளோடு இணைந்ததாகவே இருக்கும். 



இந்த இடி – மின்னல் இரண்டு வகைப்பட்டதாகும். 


இரண்டு முகில்களுக்கிடையிலான கிடையான (Horizontal) மின்னேற்றம் மற்றும் பூமியின் மேற்பரப்பிற்கும் முகில்களுக்கும் இடையிலான குத்தான (Vertical) மின்னேற்றம். 


இதில் குத்தான மின்னேற்றமே எமது உயிர், உடல் மற்றும் சொத்துப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. 


இதில் உயிர் மற்றும் உடற் பாதிப்புகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது தொடர்பான சில ஆலோசனைகள் தரப்படுகின்றன:


1. மார்ச், ஏப்ரல், மே, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செறிவான மழைவீழ்ச்சி (20 மி.மீ.) தொடங்கும் போதே அடுத்து இடி – மின்னல் நிகழ்வு இடம்பெறும் என்பதனை அனுமானித்து பாதுகாப்பிடத்திற்கு நகர்தல்.


2. பரந்த மற்றும் வெட்ட வெளிகளில் நிற்பதனைத் தவிர்த்தல்.


3. திறந்த வெளிகளில் திறந்த வாகனப் (சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்) போக்குவரத்தைத் தவிர்த்தல்.


4. தொலைபேசி மற்றும் மின்சாதனப் பயன்பாட்டைத் தவிர்த்தல்.


4. மரங்களுக்கு அண்மையில் அல்லது கீழே நிற்பதனைத் தவிர்த்தல். மழையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக எக் காரணம் கொண்டும் மரங்களின் கீழ் ஒதுங்காதிருத்தல். 


5.விவசாயிகள் விவசாய உபகரணங்களைப் பாவிக்காதிருத்தல். 




6. ஒரு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடி – மின்னல் நிகழ்வுகள் இடம்பெறுமாயின் தாடையைத் தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல். இது செவிப்பறைப் பாதிப்பைத் தடுக்கும் (இதனால் தான் எமது முன்னோர் இடி – மின்னலின் போது ‘அர்ஜூனனுக்கு அபயம்’ எனக் கூற வேண்டும் என்று தெரிவித்தனர்). 


7. இயன்றவரை கால் பாதத்தின் குதிப்பகுதி நிலத்தின் மீது படுவதனைத் தவிர்த்து காதுகளை மூடி நிலத்தில் இருத்தல்.


8. வீட்டில் நின்றாலும் சமையலறைப் பகுதியில் நிற்பதனைத் தவிர்த்தல். மேற்கூறிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இடி – மின்னல் பாதிப்புகளைக் குறைக்க முடியும். என அறிவுறுத்தியுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்