ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு...!

  

Tamil lk News/ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு/7 killed in US airstrike in Yemen

ஏமன் தலைநகரில் அமெரிக்க நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 29 பேர் காயம் அடைந்துள்ளதாக ஹவுதி குழு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் அக்குழு கூறியுள்ளது. 


மத்திய கிழக்கு கடற்பகுதியில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி குழுவிற்கு எதிராக அமெரிக்கா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.


 இந்நிலையில் வான்தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான காணொளியை ஹவுதி வெளியிட்டுள்ளது.



இருந்த போதிலும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடவில்லை.


கடந்த 2023ஆம் நவம்பர் மாதத்தில் இருந்து நூற்றுகும் அதிகமான வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி தாக்கல் நடத்தியுள்ளது.


இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்