மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 15 கைதிகள் விடுதலை

#Srilanka #Batticaloa

 

Tamil lk News

 வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (12)  மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியுமாக 15 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர்  உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



தண்டணைப் பணம்

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்றைய தினம் இவ்வாறு இலங்கை பூராகவும் உள்ள சிறைகளில் இருந்து 388 பேர்  விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்  வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்