72வது உலக அழகிப் போட்டி; வரலாற்று சாதனை படைத்த இலங்கை அழகி

  

Tamil lk News

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72வது உலக அழகி போட்டியின்போது, மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா (Multimedia Challenge) என்ற சவாலில், ஆசியாவிலிருந்து இரண்டாவது வெற்றியாளராக, இலங்கை அழகி அனுதி குணசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


அனுதியின் சிறப்பான ஆற்றல் மிக்க வௌிப்பாடு, Multimedia Challenge பிரிவில் உலகளாவிய இறுதிப் போட்டியில் முதல் 20 போட்டியாளர்களில் ஒருவராக அவரைப் பதிவு செய்தது. 



இதன்படி, குறித்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கையர் இவராகும் என்று, அவரது ஊடகக் குழு தெரிவித்துள்ளது.



இந்த சாதனையின் மூலம், 108 பங்கேற்பாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மல்டிமீடியா சவாலின் முதல் 8 உலகளாவிய வெற்றியாளர்களில், மதிப்புமிக்க இடத்தையும் அனுதி குணசேகர பெற்றுள்ளார்.



இதேவேளை இறுதிப்போட்டி நாளை நடைபெறும் போது புதிய உலக அழகி முடிசூட்டப்படவுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்