அடுக்குமாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்; கொழும்பில் பரபரப்பு

  கொழும்பு(Colombo) ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 


பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணொருவர் தமது வீட்டிற்குள் T56 ரக துப்பாக்கியை எடுத்துச் செல்வதைக் கண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Tamil lk News


பின்னர், வெள்ளவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டை சோதனை செய்து, துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். 



குறித்த பெண் 67 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 



அவரது காரின் பின்புற கதவு திறந்திருந்தபோது, ​​ஒரு பையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி இருப்பதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரி, இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 



இந்த துப்பாக்கி உண்மையானதா? இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்