பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமா? மக்களுக்கு பேரிடிச் செய்தி

செய்திகள் #Srilanka

Tamil lk News
 

 டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 


எரிபொருள் விலைக் குறைப்பு, பேருந்து கட்டணத்தை குறைக்க ஏதுவாக அமையவில்லை என அவர் தெரிவித்தார். 



பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், டீசல் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரையில் குறைக்க வேண்டும். 


இதேவேளை, இந்த வருடம் மே தினக் கூட்டங்களுக்காக பேருந்துகள் கோரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் பேருந்து

மேலும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 



இதேவேளை பெற்றோலின் விலை குறைந்த போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.



 இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதன்படி செபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டன.



குறித்த அறிக்கையின் படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் விலை 6 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 20 ரூபாவினாலும், டீசல் லீட்டருக்கு 12 ரூபாவினாலும், சூப்பர் டீசல் லீட்டருக்கு 6 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 5 ரூபாவினாலும் குறைக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிப்பிடத்தக்கது .


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்