டெங்கு நோயாளிகளுக்கு சிக்குன்குனியா சிகிச்சை: சுகாதார துறையினர் எச்சரிக்கை

செய்திகள் #Srilanka

  

Tamil lk News

டெங்கு நோயாளிகளுக்கு சிக்குன்குனியா சிகிச்சையளிப்பது ஆபத்தானது என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுகாதார துறையினர் கவலை 

இலங்கை சுகாதார அதிகாரிகள்,(Sri Lankan health officials) மழைக்காலங்களில் நுளம்புகள் இனப்பெருக்கத்தை தீவிரப்படுத்துவதால், சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் இரண்டும் பரவுவது அதிகரித்து வருவது குறித்து கடுமையான சுகாதார துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.



இரண்டு நோய்களும் ஒரே நுளம்பால் பரவுவதால் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.


கனமழை காரணமாக நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, நாடு முழுவதும் இரண்டு வைரஸ்களும் விரைவாக பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

 உயிருக்கு ஆபத்தானது

மேலும் ஒரு எச்சரிக்கையில், டெங்கு நோயாளிக்கு சிக்குன்குனியா சிகிச்சை தவறாக வழங்கப்பட்டால் உயிருக்கு ஆபத்தானது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். 



குறிப்பாக தொடர்ந்து காய்ச்சல் மற்றும் தொடர்புடைய அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.



அத்துடன், சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான சிகிச்சையை உறுதி செய்வதற்காக, சுய மருந்து செய்வதற்குப் பதிலாக உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்களுக்கு சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்