கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை கைப்பற்றியது இலங்கை தமிழ் அரசுக் கட்சி

 

Tamil lk News

 நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபையில் வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கைப்பற்றியுள்ளது.

வவுனியா

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.


அதன்படி, வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், 



வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், 



வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன.



இதேவேளை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

மன்னார்

இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன. 

முல்லைத்தீவு

அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்திற்கான மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

 கிளிநொச்சி

 கிளிநொச்சி மாவட்டத்திற்கான  பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்