இலங்கைக்கு படையெடுக்கும் இந்திய சுற்றுலா பயணிகள்

 

Tamil lk News

 இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 956,639 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 


அதேநேரம் மே மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 59,755 சுற்றுலாப் பயணிகள்  நாட்டிட்கு வருகை தந்துள்ளனர். 



அவர்களில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 18,812 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



அத்துடன் ஜேர்மனியில் இருந்து 4,447 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 4,256 சுற்றுலாப் பாயானைகளும் வருகை தந்துள்ளனர்.



மேலும்  சீனா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்