வளிமண்டலவியல் திணைக்களம் நாளை வரை சிவப்பு எச்சரிக்கை!

 

Tamil lk News

 இலங்கை(srilanka) மக்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது.


இந்த எச்சரிக்கையானது நாளை (30) பிற்பகல் 12.30 வரை அமுலில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



 அதற்கமைய, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோர கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



அதேவேளை மறு அறிவிப்பு வரும் வரை கடற்பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்