குருந்தூர்மலையில் சட்டவிரோத காணி பிடித்த பிக்கு அடாவடி; மூவர் கைது

#Srilanka Mullaitivu

 

Tamil lk News

 முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார்.


குறித்த பௌத்த பிக்கு குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார்.



 இந்த காணிகளுக்கு அண்மையாக இன்று (10) காலை குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் தனது பணியாட்கள் மூலம் உழவு செய்துள்ளார்.



 இதன்போது அங்கு வருகை தந்த குருந்தூர்மலை பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதி மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து விவசாய நடவடிக்கைகளை தடுத்தனர்.



 அதோடு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும், உழவியந்திரத்தினையும் கைது செய்து முல்லைத்தீவு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.



 காணியின் உரிமையாளர் இதய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.



 இந்த நிலையில் அவரின் பணியாளர்கள் மூலமாக விவசாய நடவடிக்கைக்கு ஆயத்தங்களை மேற்கொண்ட போதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பணியாளர்களான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்