மதுரு ஓயாவில் விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212' ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை 8.17 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் விங் கமாண்டர் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த ஹெலிகொப்டரே விபத்துள்ளானது.
ஹெலிகொப்டரின் விமானிகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.