மது போதையில் பஸ் வண்டியை செலுத்திய சாரதி; நடவடிக்கை எடுத்த பொலிஸார்

 

Tamil lk News

 மது போதையில் பஸ் வண்டியை செலுத்திய சாரதி ஒருவரை பல்லேகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நேற்று (14) கண்டியில் இருந்து மஹியங்கனை, ஹந்துன்கமுவ நோக்கிப் பயணித்த பஸ்வண்டியை பல்லேகலை பிரதேசத்தில் வைத்து தூர இடங்களுக்கான பஸ் வண்டிளை சோதனை செய்யும் திட்டத்தின் கீழ், பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.



 இதன்போது, சாரதி மது அருந்தி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்டையில் உடனடியாகப் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர்.



'எல்கோலைசர்' என்ற பலூன் ஊதும் தொழில் நுட்ப முறையில் சாரதி பரீட்சிக்கப்பட்ட போதே மது அருந்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.


 சாரதி கைது செய்யப்பட்டதை அடுத்து பயணிகளை வேறு பஸ்வண்டிகளில் அனுப்பவதற்கு பொலிஸார் ஒழுங்கு செய்தனர்.



பஸ் வண்டியில் 50 பயணிகள் வரை இருந்ததாகவும், 18 வளைவுகளைக் கொண்ட வீதியூாக செல்லும் பஸ் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



 மத்திய பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்கவின் பணிப்பின் பேரில், தூர இடங்களுக்குச் செல்லும் வாகனங்களுடன் சாரதிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்