பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Tamil lk News

  பொசன் வாரத்துடனான நிகழ்வுகளை முன்னிட்டு இன்று (07) முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகளை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 


அதன்படி, அனுராதபுரம் நகரை அண்மித்த 12 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



பொசன் வாரமானது இன்று (07) முதல் 13 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 



இம்முறை தேசிய பொசன் நிகழ்வை முழுமையான அரச அனுசரணையுடன் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 



மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களை மையமாக கொண்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்